(nokia may 29 launch teaser chargedup smartphone)
HMD குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனினை இம்மாதம் 29ம் திகதி வெளியிட இருப்பதை புதிய டீசர்களின் மூலம் தெரிவித்துள்ளது. புதிய டீசருடன் #ChargedUp என்ற ஹேஷ்டேக் இடம்பெற்றிருப்பதால் புதிய சாதனம் அதிக பேட்டரி பேக்கப் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நோக்கியா X6 சிறப்பம்சங்கள்:
– 5.8 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி+ 19:9 ரக டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
– அட்ரினோ 509 GPU
– 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, ஆன்ட்ராய்டு பி அப்டேட்
– 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், f/2.0, 1.0um பிக்சல்
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 1.2um பிக்சல்
– 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, 1.0um பிக்சல்
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3060 எம்ஏஹெச் பேட்டரி
– குவால்காம் க்விக் சார்ஜ் 3.0
நோக்கியா X6 சர்வதேச மாடல் மட்டுமின்றி நோக்கியா 2, நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களும் மே 29-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் டூயல் கேமரா செட்டப் கொண்ட நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனும் இதே விழாவில் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.
OUR GROUP SITES
nokia may 29 launch teaser chargedup smartphone