மெல்கம் டேர்ன்புல் அரசு பின்தங்கியுள்ளது

0
599
Malcom Turnbull Party Behind Opposition

Malcom Turnbull Party Behind Opposition

அவுஸ்திரேலிய எதிர்கட்சியான லேபர்கட்சியை விட பிரதமர் மெல்கம் டேர்ன்புல் தலைமையிலான அரசு, கருத்துக்கணிப்பில் தொடர்ந்தும் பின்தங்கியுள்ளது.

த ஒஸ்ட்ரேலியன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி லேபர்கட்சி இருகட்சி விருப்பு அடிப்படையில் 52 – 48 என முன்னிலை வகிக்கிறது.

கடந்த கருத்துக்கணிப்பினை விடவும் லேபர் கட்சி ஒருபுள்ளியால் முன்னேற்றம் கண்டுள்ளது.

இதேவேளை மக்களின் விருப்பத்திற்குரிய பிரதமராக தொடர்ந்து முன்னேற்றம் கண்டுவரும் பிரதமர் டேர்ன்புல் இம்முறை ஒருபுள்ளி அதிகமாகப் பெற்று எதிர்கட்சித் தலைவர் பில் ஷோர்டனை விடவும் 47 – 30 என முன்னிலை வகிக்கின்றார்.