Great reception people – steam engine train ride
உதகைக்கு பயணம் செய்யும் பலரும் நீராவி என்ஜின் ரயிலில் பயணம் செய்வதையே விரும்புவார்கள். அந்த அளவிற்கு பாரம்பரியம் கொண்டவை நீராவி ரயில்கள். அது போன்ற அனுபவத்தை சென்னையில் அளிக்கும் பொருட்டு, தெற்கு ரயில்வே உலகிலேயே பழமையான நீராவி என்ஜின் ரயிலை சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து கோடம்பாக்கம் வரை இயக்கியது.
163 வருடங்கள் பழைமையான நீராவி இன்ஜின் பொருத்தப்பட்ட பாரம்பரிய இரயிலில் 40 இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.
மேலும், குளிர்சாதன வசதி, எல்.இ.டி திரை வசதி பொருத்தப்பட்ட இந்த ரயிலில் 36 பேர் பயணம் செய்தனர். நேற்று காலை 10 மணிக்கு எழும்பூரிலிருந்து கிளம்பி ரயில் 10.30 மணிக்கு கோடம்பாக்கம் வந்தடைந்தது.
More Tamil News
- மாநிலக் கட்சிகள் தான் கிங் – சந்திரபாபு நாயுடு!
- அரசுப் பேருந்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள்!
- மீண்டும் இணைய சேவை தொடங்கியது!
- உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண தொகை ரூ.20 லட்சமாக உயர்வு – முதல்வர் அறிவிப்பு!
- ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு மீது குற்றச்சாட்டு – கனிமொழி!