விவசாய கடன் தள்ளுபடி கோரிக்கை – கர்நாடகாவில் இன்று போராட்டம்!

0
827
Demand Agricultural Debt - Struggle Today Karnataka

Demand Agricultural Debt – Struggle Today Karnataka

கர்நாடகாவில் ம.ஜ.த தலைவர் குமாரசாமி கடந்த மே 23ம் தேதி கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான பரமேஸ்வராவுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க வேட்பாளர் எடியூரப்பா, விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய பா.ஜ.க தொடர்ந்து வலியுறுத்தும் என்றார்.

மேலும் தற்போது கர்நாடக முதலமைச்சராக பதவியேற்று இருக்கும் குமாரசாமி விவசாயிகள் நலனில் அக்கறை காட்டா விட்டால், அவர்களது அரசுக்கு எதிராக பா.ஜ.க போராட்டங்களில் ஈடுபடும் என்று எச்சரித்த எடியூரப்பா, வரும் 28 ம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்தார்.

இந்நிலையில், எடியூரப்பா அறிவித்தபடி, கர்நாடக விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், குமாரசாமி தலைமையிலான அரசைக் கண்டித்தும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா முழு அடைப்புக்கு பா.ஜ.க அழைப்பு விடுக்கவில்லை என்றும், விவசாயிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தாங்கள் முழு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும் கர்நாடகத்தில் பெங்களுரு உள்ளிட்ட தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதால் அங்கு மட்டும் போராட்டம் நடைபெறாது என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :