கோடை விழாவையொட்டி வாத்து பிடிக்கும் போட்டி!

0
788
dancing competition summer festival

dancing competition summer festival

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழா கடந்த 18ம் தேதி தொடங்கிய நிலையில், பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒருபகுதியாக நட்சத்திர ஏரியில் படகில் சென்று வாத்து பிடிக்கும் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வாத்துக்களை பிடித்தனர்.

போட்டியில், சென்னையை சேர்ந்த அலமேலு 5 நிமிடம் 15 விநாடிகளில் வாத்தை பிடித்து வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல் வயது அடிப்படையில், படகு போட்டியும் நடைபெற்றது.

More Tamil News

Tamil News Group websites :