நான் காங்கிரஸ் கட்சியால்தான் முதல்வராகியுள்ளேன்; மக்களால் அல்ல – முதல்வர் குமா­ர­சாமி

0
443
People watch movie Kala Rajinikanths screening Karnataka

Chief Minister Congress Party people obliged Congress Party

நான் காங்­கிரஸ் கட்­சி­யால்தான் முதல்­வ­ராகி இருக்­கிறேன். மக்­களால் அல்ல. அதனால்  நான் காங்­கிரஸ் கட்­சிக்­குத்தான் கட­மைப்­பட்­டி­ருக்­கிறேன் என்று இந்­திய  கர்­நா­டக மாநில முதல்வர் குமா­ர­சாமி தெரி­வித்­துள்ளார்.

கர்­நா­டக மாநி­லத்தில் நடை­பெற்ற சட்­டப்­பே­ரவைத் தேர்­தலில் எந்தக் கட்­சிக்கும் பெரும்­பான்மை கிடைக்­க­வில்லை. 104 இடங்கள் பெற்று தனிப்­பெரும் கட்­சி­யாக வந்த பா.ஜ.க.வும் ஆட்சி அமைத்து, பெரும்­பான்­மையை நிரூ­பிக்க முடி­யாமல், எடி­யூ­ரப்பா முதல்வர் பத­வியை இரா­ஜி­னாமா செய்தார். இதை­ய­டுத்து, மதச்­சார்­பற்ற ஜனதா தளத்­துடன் காங்­கிரஸ் கட்சி கூட்­டணி ஆட்சி அமைத்­தது. முதல்­வ­ராக  மதச்­சார்­பற்ற ஜனதா தள கட்­சியின்  மாநிலத் தலைவர் குமா­ர­சாமி பத­வி­யேற்றார்.

முதல்­வ­ராக பதவி ஏற்­ற­நி­லையில், பிர­தமர் மோடியைச் சந்­தித்து மாநி­லத்தின் நலத்­திட்­டங்கள் குறித்து குமா­ர­சாமி பேச­வுள்ளார்.

இது குறித்து பெங்­க­ளூரில் செய்­தி­யா­ளர்­களை சந்­தித்­போது அவர் அளித்­துள்ள செவ்­வியில் தெரி­வித்­துள்­ள­தா­வது,

இப்­போது கர்­நா­ட­கத்தில் அமைந்­தி­ருக்கும் அரசு ஒரு கட்சி அரசு அல்ல. எங்கள் கட்­சியின் பெரும்­பான்மை அரசும் அல்ல. நான் மக்­க­ளிடம் தேர்தல் பிர­சா­ரத்தில் முழு­மை­யான ஆத­ரவு தாருங்கள் என்று கேட்டேன். ஆனால், அவர்கள் தர­வில்லை. ஆனால், காங்­கிரஸ் கட்­சி­யுடன் இணைந்து நாங்கள் கூட்­டணி அமைத்தோம். என்னை முதல்­வ­ராக்­கி­யதும் காங்­கிரஸ் கட்­சிதான். மாநி­லத்­தி­லுள்ள 6.50 கோடி மக்­களால் அல்ல.

விவ­சா­யி­களின் பயிர்­கடன் தள்­ளு­படி செய்ய நெருக்­கடி தரப்­ப­டு­கி­றது. நான் பா.ஜ.­க.வைக் காட்­டிலும், ஒரு­படி மேலே சென்று விவ­சா­யி­க­ளுக்­காக உழைப்பேன். விவ­சா­யிகள் வங்­கியில் பெற்ற பயிர்­க­டனை தள்­ளு­படி செய்வேன்.

பயிர்­க­டனை தள்­ளு­படி செய்­யா­விட்டால், பத­வியை இரா­ஜி­னாமா செய்­து­வி­டு­வீர்­களா என்றும் என்னைக் கேட்­க­வேண்­டி­ய­தில்லை. என்னால் விவ­சா­யி­களின் பயிர்­க­டனை தள்­ளு­படி செய்ய முடி­யா­விட்டால், நான் எனது முதல்வர் பத­வியை இரா­ஜி­னாமா செய்து­வி­டுவேன். விவ­சா­யி­களின் கடனை தள்ளு­படி செய்­வ­தற்­குத்தான் முன்­னு­ரிமை. இன்னும் ஒரு­வாரம் பொறுத்­தி­ருங்கள். அமைச்­ச­ரவை அமை­யட்டும்.

பயிர்­க­டனை தள்­ளு­படி செய்­வது குறித்து கூட்­டு­றவு வங்­கி­க­ளி­டமும், தேசிய வங்­கி­க­ளி­டமும் ஆலோ­சனை நடத்தி வரு­கிறேன் விவ­சா­யிகள் அவ­ச­ரப்­பட்டு எந்­த­வி­த­மான தவ­றான முடிவும் எடுத்து, தங்கள் உயிரை மாய்த்துக்­கொள்ளக் கூடாது. மாநி­லத்­துக்கு அளிக்க வேண்­டிய நிதி­யு­த­விகள், திட்­டங்கள் ஆகி­ய­வற்றை விரைந்து செயல்­ப­டுத்­தக்­கோரி பிர­தமர் மோடி­யையும் மத்­திய அமைச்­சர்­க­ளையும் சந்திக்க இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Chief Minister Congress Party people obliged Congress Party

More Tamil News

Tamil News Group websites :