இந்த ஆடையில் என்ன பிரச்சினை? : பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது

0
734
School Student Top

School Student Top

பாடசாலையில் யுவதியொருவர் அணிந்த உடையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு கெரோலீனாவைச் சேர்ந்த 18 வயதான மாணவியொருவர் தோற்பட்டை வெளியில் தெரியும் வகையில் உடையொன்றை அணிந்து வெளியே சென்றுள்ளார்.

கோடை என்பதால் தனது ஆடை அதற்கு ஏற்றதாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மேலாக ஜெக்கட் ஒன்றை அணிவதாக கூறியுள்ளார்.

ஆனால் அவரது பதிலால் அதிபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பாடசாலையின் ஆடை தொடர்பான அறிவிப்பு பெரும் சர்ச்சையும் வாதப் பிரதிவாதங்களும் எழுந்துள்ளன.

இதற்கு முன்னரும் ஆடை தொடர்பான ஒரு சர்ச்சையில் குறித்த பாடசாலை சிக்கியுள்ளமையானது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஆடைச்சுதந்திரம் மற்றும் பருவகாலத்திற்கு ஏற்றதாக அமையவேண்டியதன் அவசியம் குறித்து பாடசாலை நிர்வாகம் கவனத்தில் கொள்ளாதது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

சமூகவலைதளங்களில் இது தொடர்பில் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.