​நாளை தூத்துக்குடி செல்கிறார் துணை முதல்வர் – ஓ.பி.எஸ்!

0
833
vice chief ops travels thoothukudi tomorrow

vice chief ops travels thoothukudi tomorrow

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டதுடன், இணைய சேவையும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.

இதனையடுத்து துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை தூத்துக்குடி செல்ல உள்ளார். அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க இருப்பதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அங்கு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

More Tamil News

Tamil News Group websites :