much heavy summer sunshine delhi india
டெல்லி, சப்தர்ஜங் பகுதியில் நேற்று-(26.05.18) அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு அடுத்து இதுபோன்ற அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வெப்பநிலை அடுத்த இரண்டு நாட்களுக்கு தொடரும் எனவும் புதன்கிழமையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டு, டெல்லியில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 44.6 டிகிரி செல்சியஸ். செப்டம்பர் 29, 1944 அன்று டெல்லி, சப்தர் ஜங்கில் அதிகபட்சமாக 47.2 டிகிரி செல்சியஸை தொட்டது.
இதுபோன்ற வெப்பம் காரணமாக டெல்லியில் வாழும் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். அதுமட்டுமல்லாமல், உடல் வறட்சி காரணமாக பல்வேறு பறவைகளும் உயிரிழந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
More Tamil News
- பாம்பன் சாலை பாலத்தில் வெடிகுண்டு – மர்ம அழைப்பு!
- கடன் பெற்றவரின் மனைவியை தாக்கிய கொடூரம்!
- தோல் கழிவுகளை ஏற்றிச் சென்ற லாரி!
- குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!
- ஸ்வீட் கடைக்காரரை அடித்துக் கொலை செய்த நபர்!