complaint congress cabinet allocation coomaraswamy
அமைச்சரவை ஒதுக்கீட்டில் சிக்கல் காரணமாக காங்கிரஸ் தலைமை உடன் ஆலோசனை செய்ய டெல்லி புறப்பட்ட குமாரசாமி, முன்னதாக பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், காங்கிரஸுக்கு 22 அமைச்சர் பதவிகளும், தங்கள் கட்சிக்கு 12 அமைச்சர் பதவிகளும் ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
ஆனால், கர்நாடக காங்கிரஸார் டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் பேசி முடிவெடுக்க தனி விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளதால் இழுபறி நீடிப்பதாகக் கூறிய முதல்வர் குமாரசாமி, இறுதி முடிவு எட்டப்பட்ட பின் அமைச்சரவை விரிவாக்கம் சுமூகமாக நடைபெறும் எனக் குமாரசாமி தெரிவித்தார்.
இதனிடையே, எடியூரப்பா முதல்வராக இருந்த போது விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும், என்ற அறிவிப்பை அமல்படுத்துவது குறித்த கேள்விக்கு, தற்போதைய சூழலில் அது குறித்து கூட்டணி கட்சியான காங்கிரஸிடம் கலந்தாலோசிக்க வேண்டுமென்றும், அதற்கு முன்னதாக அரசின் நிதிநிலை குறித்தும் ஆராய வேண்டுமென்று குமாரசாமி தெரிவித்தார்.
இந்நிலையில், தான் முதல்வராக இருந்த போது உறுதியளித்த விவசாயக் கடன் தள்ளுபடியை அரசு அமல்படுத்த வேண்டும், என்பதை வலியுறுத்தி நாளை மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More Tamil News
- உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் – தியாகராஜர் கோயில்!
- குன்னூரில் பார்வையாளர்களை கவர்ந்த ராணுவ இசை நிகழ்ச்சி!
- ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் – கடம்பூர் ராஜூ!
- நாளை தூத்துக்குடி செல்கிறார் துணை முதல்வர் – ஓ.பி.எஸ்!
- ஏழுமலையான் கோயிலுக்கு ரூ. 2.5 கோடி மதிப்பிலான தங்க வாள் காணிக்கை!