Coimbatore district police arrested 11 juveniles raped arrested
12 வயது சிறுமியொருவர் 11 பேரால் பாலியல் வல்லுறவுக்குட்டுத்தப்பட்ட சம்பவம் ஒன்று தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
கோவை ஆனைகட்டி அருகேயுள்ள அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியொருவரை அவரது பெற்றோருக்கு தெரிவிக்காமல் பெண்ணொருவர் அப்பகுதியில் நடைபெற்ற திருவிழா ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இரவாகியும் தமது மகளை காணாமல் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் மகளை கண்டு பிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து, பெற்றோர் கோவை மாவட்ட பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இதன்பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்துள்ளனர்.
இந்த நிலையில், பொலிஸார் கோவில் விழாவை கண்காணிப்பதற்காக சென்றுள்ளனர். செல்லும் வழியில் ஒரு குடிசையில் ஒரு பெண்ணுடன் சிறுமியொருவர் அழுதப்படி நின்றுள்ளார். குறித்த சிறுமியை மீட்ட பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருவிழாவுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பெண்ணொருவர் சிறுமியை கடத்திச் சென்று அங்குள்ள 11 இளைஞர்களுக்கு விருந்தாக்கியுள்ளார்.
குறித்த பெண்ணை கைது செய்த பொலிஸார், சிறுமியை மீட்டு அட்டப்பாடி அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறுமியை கூட்டாக சேர்ந்து பலர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சிறுமியை வல்லுறவுக்குட்டுத்திய 11 இளைஞர்கள்கள் மற்றும் உடந்தையா இருந்த பெண்ணையும் கோவை மாவட்ட பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைத்துள்ளனர்
Coimbatore district police arrested 11 juveniles raped arrested
More Tamil News
- ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு மீது குற்றச்சாட்டு – கனிமொழி!
- மாஜிஸ்திரேட் சம்மனுக்கு உயிரிழந்தோரின் உறவினர்கள் நிபந்தனை!
- முக்கிய அரசியல் தலைவர்களின் டயட் பிளான்!
- ஜவஹர்லால் நேருவின் 54வது நினைவு தினம் இன்று!
- பெண்களை மிரட்டி நகைகளை பறித்து சென்ற கல்லூரி மாணவர்கள்!
- அமைச்சரவை ஒதுக்கீட்டில் காங்கிரஸ் உடன் சிக்கல் – குமாரசாமி!
- ஏழுமலையான் கோயிலுக்கு ரூ. 2.5 கோடி மதிப்பிலான தங்க வாள் காணிக்கை!
- கடன் பெற்றவரின் மனைவியை தாக்கிய கொடூரம்!
- ஸ்வீட் கடைக்காரரை அடித்துக் கொலை செய்த நபர்!
Tamil News Group websites :