(tamilnews Appeals filed Arjun Aloysius Executive Officer Kasun Palisena)
தமக்கு பிணை வழங்குமாறு கோரி பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் தாக்கல் செய்த மீள் பரிசீலனை மனு மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் நீதிபதி சிரான் குணரத்ன முன்னிலையில் நேற்று (25) இடம்பெற்றது.
இந்த வழக்கில் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன நீதிமன்றில் வாக்குமூலம் அளித்தனர்.
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தம்மை பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் மறுப்புத் தெரிவித்ததாக குறிப்பிட்டனர்.
இருந்தபோதும், விசாரணைகளின் படி இரகசியப் பொலிஸார் நீதிமன்றுக்கு சமர்பித்த அறிக்கையில் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் எந்த தவறும் இனங் காணப்படவில்லை என்று மனுதாரர்கள் தெரிவித்தனர்.
இதன்காரணமாக, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பிணை மறுப்புத் தீர்ப்பு சட்டத்துக்கு முரணானது என்று தீர்ப்பளித்து தம்மை பிணையில் விடுவிக்க உத்தரவிடுமாறு அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
சந்தேகநபர்களுக்கு சட்ட ரீதியாகவே கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்ததாக, சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் யசந்த கோதாகொட மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி வழங்கிய முறைப்பாடு ஆகியவற்றின் பிரகாரம் இரகசியப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததாக யசந்த கோதாகொட குறிப்பிட்டார்.
விசாரணைகளில் வௌியான தகவல்களின் பிரகாரம் இரகசியப் பொலிஸார் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்பித்ததாகவும், அதன்படியான நிலைமைகளை ஆராய்ந்து சந்தேக நபர்களுக்கு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விடயம் குறித்து அரச தரப்பிலான விளக்கம் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.
(tamilnews Appeals filed Arjun Aloysius Executive Officer Kasun Palisena)
More Tamil News
- தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு உயிரிழந்த மக்களுக்கு யாழில் அஞ்சலி
- கடுவல பியகம பாலத்தில் அபாயம் இல்லை
- சிறுவனை துஷ்பிரயோகப்படுத்திய பொலிஸ் அதிகாரி; கெபிதிகொல்லாவையில் சம்பவம்
- 17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்
- நாடெங்கும் வெள்ளப்பெருக்கு; இங்கினியாகலையில் நீரில்லை
- வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’
- மஸ்கெலியாவில் மண்சரிவு; 8 குடும்பங்கள் இடம்பெயர்வு
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- ஞானசார தேரர் குற்றவாளி; ஹோமாகம நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு