{ Review Age Vehicle Licensing Malaysia }
மலேசியா: வாகனம் ஓட்டுவதற்கான சாரதி பத்திரம் பெறுவதற்கான குறைந்த பட்ச வயதை மறுபரிசீலனை செய்வது குறித்து பொதுமக்களின் கருத்துக்களை போக்குவரத்து அமைச்சு நாடியுள்ளது.
இது குறித்து எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்னர் மக்களின் குறிப்பாக, பெற்றோர்களின் கருத்துக்களை அறிய அமைச்சு விரும்புகின்றது என்று அமைச்சர் அந்தோணி லோக் கூறியுள்ளார்.
தற்போது வாகன லைசென்சுகளுக்கான குறைந்தபட்ச வயதாக மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு 16 வயது என்றும் காரோட்டிகளுக்கு 17 வயது என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்தக் குறைந்தபட்ச வயதினை மறுஆய்வு செய்யவேண்டுமா? என்பது தொடர்பில் கருத்தை அறிய விரும்புகின்றோம். குறிப்பாக பெற்றோர்களின் கருத்து வரவேற்கப்படுகின்றது.
இவர்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்க, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தலாம். சாலைப் பாதுகாப்பு துறையான ஆர்எஸ்டி, போக்குவரத்த அமைச்சு மற்றும் தம்முடைய முகநூலைக் கூட பயன்படுத்தலாம் என்று அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
இதனிடையே 2016 ஆம் ஆண்டில் 7,152 பேர் சாலை விபத்துக்களில் இறந்துள்ளனர். இவர்களில் 1,161 பேர் 16 வயதுக்கும் 21 வயதுக்கும் உட்பட்டவர்கள். இதர 1,000 பேர் 21 வயதுக்கும் 25 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்று அந்தோணி லோக் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய சாலை விபத்துக்களில் மோட்டார் சைக்கிளோட்டிகளும் அவர்களின் பின்னால் அமர்ந்து செல்பவர்களுமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான் லைசென்ஸ் பெறும் வயது குறித்து மறுபரிசீலனை செய்வது குறித்து அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது என்று அவர் கூறியுள்ளார்.
இருப்பினும் நகர்ப்புறம் அல்லாத பகுதிகளில், போக்குவரத்து வசதிக்குறைவினால், இளையோர்கள் குறிப்பாக இடைநிலைப்பள்ளி மாணவர்கள் மோட்டார் சைக்கிள்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர் என்பதையும் தாங்கள் அறிந்து இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
Tags: Review Age Vehicle Licensing Malaysia
<< RELATED MALAYSIA NEWS>>
*ஜமால் யூனோஸ் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு..!
*அல்தான்துயா கொலை வழக்கு தொடர்பில் மறு விசாரணை செய்ய ஆதாரம் எதுவுமில்லை..!
*பக்காத்தானில் மைபிபிபி கட்சியுடன் சேராது! கேவியஸ் அறிவிப்பு!
*சிலாங்கூரின் புதிய மந்திரி புசார் நோன்பு பெருநாளுக்கு பின் நியமனம்!
*சபாவில் பெண் துணை முதல்வராக சீனப் பெண்மனி கிறிஸ்டினா நியமனம்!
*முன்னாள் பிரதமர் நஜிப்பிடமிருந்து பறிமுதல் செய்த பணம் எங்களுக்கு வேண்டும்: அம்னோ அறிவிப்பு!
*போர்ட்டிக்சன் தொழில் பயிற்சிக் கல்லூரி மாணவி கொலை!
*நஜிப் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 11 கோடியே 40 லட்சம்!
*மலேசிய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.கள் சொத்து கணக்குகளை வெளியிட வேண்டும்..! வான் அஸீசா அறிவிப்பு
<< RELATED MALAYSIA NEWS>>