பிரதமர் மோடியின் நான்காண்டு சாதனைகளை எடுத்துக் கூற ஓராண்டு போதாது- தமிழிசை

0
842
Narendra Modi achievement enough Tamilisai Soundararajan said

Narendra Modi achievement enough Tamilisai Soundararajan said

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நான்காண்டு சாதனைகளை எடுத்துக் கூற ஒராண்டு போதாது என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நிறைவடைந்து இன்றுடன் (சனிக்கிழமை) நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அதனைக் கொண்டாடும் விதமாக தமிழக பா.ஜ.க. தலைவர் அக்கட்சியின் தலைமையகமான தி.நகரில் அமைந்துள்ள கமலாலயத்தில் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை,

“எத்தனை எதிர் விமர்சனங்கள் வந்தாலும் வருங்காலத்தில் பா.ஜ.க. மட்டும் தான் நிலையாக இருக்கும். மீண்டும் பிரதமராக நரேந்திர மோடியே வர வேண்டும் என 70 சதவீதத்திற்கும் மேலான மக்கள் சொல்வதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதனால், பா.ஜ.க. நிச்சயம் அடுத்த தேர்தலிலும் ஆட்சியை அமைக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் நான்காண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூற ஒராண்டு போதாது. அந்தளவிற்கு எங்களின் சாதனைகள் இருக்கின்றன. தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. பா.ஜ.க. ஆட்சி பற்றி எதிர்மறை தகவல்கள் வேகமாக பரப்பப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

Narendra Modi achievement enough Tamilisai Soundararajan said

More Tamil News

Tamil News Group websites :