(military trying acquire people land murikandy)
முறிகண்டி பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்திய காணிகளை இராணுவத்தினர் மீண்டும் கையகப்படுத்தும் நோக்கில் வேலி அமைக்க முற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முறிகண்டிப் பகுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் 2015 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் படையினர் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அங்குள்ள பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குறித்த பகுதியில் 10 ஏக்கர் வரையான காணி அங்கு அமைந்துள்ள இந்து ஆலயம் ஒன்றுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், அப்பகுதியை படையினர் வேலி அமைத்து அடைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் தமது தொலைபேசிகளில் ஒளிப்பதிவு செய்து, அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குற்றச்சாட்டை அடுத்து, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசாவும் பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளும் நேற்றுமுன்தினம் சென்று ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.
More Tamil News
- யாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி இணைப்புக்கள் துண்டிக்க நடவடிக்கை
- வைரஸ் தொற்று அதிகரிப்பு; மக்களே அவதானம்; 14 பேர் பலி
- முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிய தமிழ் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்; பேரினவாதிகளின் சதி
- சுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா? யாழ். நல்லூரில் ஆர்ப்பாட்டம்
- தமிழர் தாயகத்தில் கொதித்தெழுந்த மக்கள்; ஹற்றன் நஷனல் வங்கி அதிர்ச்சியில்
- ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து தடை
- கரடி தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர் வைத்தியசாலையில்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com
Tags; military trying acquire people land murikandy