சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் – காடுவெட்டி குரு!

0
1217
died treatment chennai hospital - Kaudvedi Guru

died treatment chennai hospital – Kaudvedi Guru

வன்னியர் சங்கத்தின் தலைவர் காடுவெட்டி குரு சில ஆண்டுகளாவே தொண்டைவலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதன்காரணமாக இரண்டு முறை தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதன் பிறகு உடல்நிலை மோசமான நிலையில் கடந்த ஏப்ரல் 12ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் மற்றும் தொண்டை உள்ள திசுக்கள் அதிகம் பாதிப்படைந்ததால், காடுவெட்டி குருவுக்கு ஏற்பட்டுள்ள சுவாசப் பிரச்சினையை தீர்க்க நடு மூச்சுக்குழலில் அறுவை சிகிச்சை செய்து சுவாசிக்கச் செய்யும் டிரக்கியாஸ்டோமி எனும் அறுவை சிகிச்சை ஏப்ரல் 21ம் தேதி செய்யப்பட்டது. பிறகு உடல் நிலை தேறி வருகிறார், என்று மருத்துவர் ராமதாசே அறிக்கைகள் வெளியிட்டார்.

இந்நிலையில் நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மூச்சை நிறுத்திக் கொண்டார் காடுவெட்டி குரு.

More Tamil News

Tamil News Group websites :