நேற்று (மே 25), உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரு காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது. 2 police officer shooting France
நேற்று காலை 10.00 மணி அளவில் Amiens ( Ailly-sur-Somme) நகரில், உடற்பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த அதிகாரிகள் இருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளனர். உடனடியாக, இருவரும் Amiens பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு அதிகாரியின் இடுப்பு பகுதியில் குண்டு பாய்ந்துள்ளதுடன், இரண்டாவது அதிகாரிக்கு இலேசான உராய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். ஆனாலும் இரு அதிகாரிகளின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை அப்பகுதி ஜோந்தாமினர் மேற்கொண்டு வருகின்றனர்.
**Most Related Tamil News**
- பிரான்ஸில் திடீரென பற்றிய கனரக எரிபொருள் கொள்கலன்!
- பிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- கொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை!