பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பு! : வெளியேறுகிறார் முன்னணி வீரர்!

0
719
Babar azam injured vs England Test 2018

(Babar azam injured vs England Test 2018)

இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரிலிருந்து பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர் பாபர் அஷாம் உபாதையால் விலகியுள்ளார்.

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தங்களது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியது.

இதன்போது 68 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த பாபர் அஷாமுக்கு எதிராக பென் ஸ்டோக்ஸ் பந்து வீசினார். ஸ்டோக்ஸ் வீசிய பந்து நேரடியாக அஷாமின் முழங்கை பகுதியை தாக்க, அவர் வலியால் துடித்தார்.

பின்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களுக்கு பின்னர் மைதானத்தை விட்டு வெளியேறினார். இதன்படி மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகளின் படி அஷாமின் முழங்கை பகுதியிலுள்ள எலும்பு முறிவடைந்தமை உறுதிசெய்யப்பட்டது.

தற்போது பாபர் அஷாமுக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக இவர், டெஸ்ட் மற்றும் இங்கிலாந்து அணிக்கெதிரான முழு தொடரிலும் விளையாட மாட்டார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இவருக்கு பதிலாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பர்கர் ஷமான், உஸ்மான் ஷல்ஹுதீன் மற்றும் சமி அஸ்லாம் ஆகியவர்களில் ஒருவர் விளையாடலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

<<Tamil News Group websites>>