(tamilnews kilinochi private bus owners strike district wide)
கிளிநொச்சி மாவட்டத்தில் நாளை (26-05-2018) அனைத்து பேரூந்துகளும் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக மாவட்டத்தின் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் நா.நகுலராஜா தெரிவித்துள்ளார்.
வட மாகாண போக்குவரத்து அதிகார சபையினால் கிளிநொச்சி பேரூந்து உரிமையாளர்கள் பாதிப்படையும் வகையில் வவுனியாவிலிருந்து கிளிநொச்சி வலைப்பாட்டு கிராமத்திற்கு வவுனியா மாங்குளம் மல்லாவி ஊடாக பேரூந்து சேவை ஒன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன், வவுனியா மாங்குளம் கிளிநொச்சி ஊடாக பூநகரிக்கும் ஒரு பேரூந்து சேவைக்கான அனுமதியை வீதி போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் வழங்கியுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட பேரூந்து உரிமையாளர் பெரும் நெருக்கடிக்கு மத்தியில் போதுமான சேவையினை மீள்குடியேற்றம் காலம் தொடக்கம் வழங்கி வருகின்றார்கள்.
வலைப்பாடு என்பது ஒரு குறிப்பிட்டளவு மக்களை கொண்ட கிராமம்.
இந்த கிராமத்திற்கு வீதி போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் வவுனியாவிலிருந்து நேரடியாக பேரூந்து சேவை ஒன்றுக்கு அனுமதி வழங்கியிருப்பது கிளிநொச்சி மாவட்ட பேரூந்து உரிமையாளர்களை பெரிதும் பாதிக்கும் செயற்பாடாகும்.
மேலும், கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு முன் உரிமை மாற்றம் செய்யப்பட்ட அனைத்து தற்காலிக வழியனுமதிபத்திர உரிமையாளர்களையும் தற்போது உருவாக்கப்பட்ட வீதி போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் ஒரு இலட்சம் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளமையினையும் கண்டித்து நாளை சனிக்கிழமை கிளிநொச்சியில் இருந்து இடம்பெறுகின்ற வெளியூர் மற்றும் உள்ளுர் தனியார் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்படவுள்ளனர்.
(tamilnews kilinochi private bus owners strike district wide)
More Tamil News
- தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு உயிரிழந்த மக்களுக்கு யாழில் அஞ்சலி
- கடுவல பியகம பாலத்தில் அபாயம் இல்லை
- சிறுவனை துஷ்பிரயோகப்படுத்திய பொலிஸ் அதிகாரி; கெபிதிகொல்லாவையில் சம்பவம்
- 17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்
- நாடெங்கும் வெள்ளப்பெருக்கு; இங்கினியாகலையில் நீரில்லை
- வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’
- மஸ்கெலியாவில் மண்சரிவு; 8 குடும்பங்கள் இடம்பெயர்வு
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- ஞானசார தேரர் குற்றவாளி; ஹோமாகம நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com