சேகரித்த பணத்தை திருப்பித் தாருங்கள் – தவராசா வலியுறுத்தல்

0
520
Council leader Davarasa requested refund money Mullivaikal memory

(Council leader Davarasa requested refund money Mullivaikal memory)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்காக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் செலுத்திய 7 ஆயிரம் ரூபாவினை தனக்கு மீள வழங்குமாறு வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

மே – 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலிக்கான ஏற்பாட்டுச் செலவுகளின் பொருட்டு வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 38 பேரில் 33 பேரிடம் இருந்து தலா 7 ஆயிரம் ரூபா பெறப்பட்டிருந்த்து.

குறித்த நிகழ்வை வடக்கு மாகாண சபை செய்வதன் அடிப்படையில் அந்த ஏற்பாடும் இடம்பெற்றது.

இருப்பினும் குறித்த நினைவை வடக்கு மாகாண சபை செய்யவில்லை என்பதன் அடிப்படையில் தன்னால் சம்மதம் தெரிவிக்கப்பட்ட 7 ஆயிரம் ரூபா பணத்தினையும் தனக்கு மாகாண சபை மீள வழங்க வேண்டும் என சி.தவராசா சபையின் அவைத் தலைவருக்கு எழுத்து மூலம். கோரிக்கை விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால். நினைவு 2016ம் ஆண்டு முதல் வடக்கு மாகாண சபை முன்னெடுத்துவரும் நிலையில் இந்த ஆண்டு பல்கலைக் கழக மாணவர்கள் மேற்கொண்ட நிலையில் பல சர்ச்சைகள் வெளிவருவதும் குறிப்பிடத்தக்கது.

(Council leader Davarasa requested refund money Mullivaikal memory)

More Tamil News

Tamil News Group websites :