சீமான் பேச்சு கேட்பதற்கே பயங்கரமாக உள்ளது – உயர்நீதிமன்ற நீதிபதி!

0
941
Seeman scary talk - madurai High Court judge

அந்தகால அரசியல் தலைவர்களின் பேச்சு சிந்தனையை தூண்டும் விதமாக இருந்தது என்றும், ஆனால் தற்போது சீமான் உள்ளிட்டோரின் பேச்சு கேட்பதற்கே பயங்கரமாக உள்ளது என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். Seeman scary talk – madurai High Court judge

திருச்சி விமான நிலையத்தில் கடந்த 19 ஆம் தேதி மதிமுக – நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் சீமான் உள்ளிட்ட 8 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கில் முன்ஜாமீன் கோரி, சீமான் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி கிருஷ்ணவள்ளி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி கிருஷ்ணவள்ளி, அந்தக்கால தலைவர்களின் பேச்சு சிந்தனையை தூண்டும் வகையில் இருந்தது என்றார். ஆனால் தற்போது சீமான் உள்ளிட்டோரின் பேச்சு கேட்பதற்கே பயங்கரமாக உள்ளது என்றும் நீதிபதி கூறினார்.

மேலும் சீமான் பேச்சை கேட்க நேரும் போது தான் விலகி சென்றுவிடுவதாகவும் நீதிபதி குறிப்பிட்டார். தலைவர்கள் உணர்ச்சியை தூண்டும்விதமாக பேசிவிட்டு குளிர்சாதனம் கொண்ட அறைக்கு சென்று விடுவார்கள் என்று கூறிய நீதிபதி ஆனால் பாதிக்கப்படுவது அப்பாவி தொண்டர்கள் தான் எனவும் கருத்து தெரிவித்தார். அதே சமயம் சீமான் உள்ளிட்ட ஆறு பேரை மே 30ஆம் தேதி வரை கைது செய்ய கூடாது என திருச்சி காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

More Tamil News

Tamil News Group websites :