முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழ்த் தேசிய துக்க நாளாக அறிவித்தமை தவறில்லை – மாவை எம்.பி

0
582
good governance government not fulfilled promise Tamil people

(Northern Provincial Council Mullivaikkal declared Tamil National Sorrow)

வட மாகாண சபை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை தமிழ்த் தேசிய துக்க நாளாக அறிவித்தமையில் ஒரு தவறும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான, வட மாகாண சபையின் தீர்மானம் உண்மையானது எனவும் அவர் கூறியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாண சபை நடாத்தியமை தொடர்பில் தென்னிலங்கையில் பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேலும் கூறுகையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை தமிழ் தேசிய துக்க நாளாக பிரகடனப்படுத்தியமையில் ஒரு தவறும் இல்லை.

ஆனால் அதனை தென்னிலங்கையில் தவறாக விமர்சிக்கின்றார்கள்.

இதனை ஒரு முரண்பாட்டுக்கான விடயமாக மாற்ற இடமளிக்க கூடாது என நாம் அரசாங்க த்தை கேட்டிருக்கின்றோம்.

இதற்கு மட்டுமல்ல தமிழ் மக்களுடைய நிலங்களை விடுவிக்கு ம்போதும் கூட பல விமர்சனங்கள் வந்தன.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒருவர் முன்னர் கடற்படையில் இருந்தவர் அவர் கூறினார் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் படையினரிடமிருந்து காணிகள் விடுவிக்கப்படுவதாக விமர்சித்தார்கள்.

இவ்வாறான விமர்சனங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் இடமளிக்காமல் நாங்கள் செய்யவேண்டிய வேலைகளை செய்து கொண்டிருப்போம்.

2011 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை, அமெரிக்கா அழைத்து பேசியபோது போர்க் குற்றம் தொடர்பான பிரேரணை ஒன்றை கொண்டு வரவேண்டும் என்பது ஏற்கப்பட்டிருந்தது.

ஆனால், பின்னர் ஒரு நாட்டின் மீது நேரடியாக அவ்வாறான தீர்மானத்தை கொண்டுவர இயலாத நிலையில் பின்னர் அந்த பிரேரணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆகவே, பௌத்த பிக்குகளும், ராஜபக்ஷக்களும், தமிழ் மக்களுக்கு எந்தவொரு நல திட்டங்களும் கொடுக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தீவிரமான கருத்துக்களை பரப்பி கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவேதான், இந்த விடயத்தை நாங்கள்
மிகவும் நிதானமாக கையாளவேண்டும் என கூறியிருக்கின்றேன்.

மேலும் இந்த விடயத்தை அடிப்பைடயாக கொண்டு முரண்பட்ட நிலைகள், அல்லது தீவிரமான நிலைகள் உருவாக கூடாது.

அதற்கு அரசாங்கம் இடமளிக்க கூடாது என்பதை நாம் அரசுக்கு கூறியுள்ளோம் எனவும் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.

(Northern Provincial Council Mullivaikkal declared Tamil National Sorrow)

More Tamil News

Tamil News Group websites :