அல்தான்துயா கொலை வழக்கு தொடர்பில் மறு விசாரணை செய்ய ஆதாரம் எதுவுமில்லை..!

0
865
no evidence investigate Altantuya case, malaysia tami news, malaysia, malaysia news, Altantuya,

{ no evidence investigate Altantuya case }

மலேசியா: ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் அல்தான்துயாவின் வழக்கை மறு விசாரணை செய்யவில்லை என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ பூசி ஹருண் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் போலீஸ் எந்தப் புகாரையும் பெறவில்லை என்றும் அதில் புதிய ஆதாரங்கள் ஏதும் இல்லையென்பதால் அதனை மறு விசாரணை செய்யவில்லை. ஆதாரங்கள் ஏதும் கிடைத்தால் வழக்கு மறு விசாரணை செய்யப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஷா ஆலம், புஞ்சாக் ஆலமில் உள்ள சுபாங் அணைக்கட்டுக்கு அருகில் உள்ள காட்டில் மங்கோலிய அழகி அல்தான்துயா சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர், வெடி குண்டைப் பயன்படுத்தி அவரின் உடல் சிதற வைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அது சம்பந்தமாக இரு போலீஸ்காரர்களான சிருல் அஷ்ஹார் உமார் மற்றும் அஸிலா ஹட்ரி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டு கடந்த 2009ஆம் ஆண்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் கடந்த 2013ஆம் ஆண்டு மேல் முறையீட்டு நீதிமன்றம் அத்தண்டனையை தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அல்தான்துயாவின் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் கண்டு தண்டிக்கப்பட வேண்டுமென்றும் அப்போதுதான், அல்தான்துயாவின் குடும்பத்தாருக்கு நீதி கிடைக்கும் என்றும் மங்கோலிய அதிபர் கலிமாகின் பாட்டுல்கா பிரதமர் துன் மகாதீருக்குக் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: no evidence investigate Altantuya case

<< RELATED MALAYSIA NEWS>>

*பக்காத்தானில் மைபிபிபி கட்சியுடன் சேராது! கேவியஸ் அறிவிப்பு!

*சிலாங்கூரின் புதிய மந்திரி புசார் நோன்பு பெருநாளுக்கு பின் நியமனம்!

*சபாவில் பெண் துணை முதல்வராக சீனப் பெண்மனி கிறிஸ்டினா நியமனம்!

*முன்னாள் பிரதமர் நஜிப்பிடமிருந்து பறிமுதல் செய்த பணம் எங்களுக்கு வேண்டும்: அம்னோ அறிவிப்பு!

*போர்ட்டிக்சன் தொழில் பயிற்சிக் கல்லூரி மாணவி கொலை!

*நஜிப் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 11 கோடியே 40 லட்சம்!

*மலேசிய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.கள் சொத்து கணக்குகளை வெளியிட வேண்டும்..! வான் அஸீசா அறிவிப்பு

*மலேசியாவின் ஏழாவது பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார் ஜப்பான் பிரதமர்!

*மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு மீண்டும் வருகை புரிந்தார் முன்னாள் பிரதமர் நஜிப்..!

<< RELATED MALAYSIA NEWS>>