ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து தடை

0
1280
Landslide Hatton Colombo main road

(Landslide Hatton Colombo main road Traffic barrier)
கினிகத்ஹேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட வண்ணம் இருப்பதனால் அந்த வீதியூடான போக்குவரத்து ஒரு வழி போக்குவரத்தாக இடம்பெற்று வருகின்றது.

பெய்து வரும் தொடர் மழையினால் மலையகத்தின் பல பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

கினிகத்ஹேனை தியகல பகுதியில் பாதை அபிவிருத்தி அதிகார சபையினரால் நிர்மாணிக்கப்படும் மண்மேடுப் பகுதியே இவ்வாறு சரிந்த வண்ணம் காணப்படுகின்றது.

இந்த நிலையில் காலை முதல் குறித்த மார்க்கத்திற்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்ட நிலையில், சிறிது நேரம் கனரக வாகனங்களை நிறுத்திய பின்னர் அனுப்பப்பட்டது.

எனினும் ஹட்டனில் இருந்து செல்லும் வாகனங்களை நாவலப்பிட்டி, தலவாக்கலை மற்றும் கலுகல, லக்ஷபான வழியையும் பயன்படுத்துமாறு பொலிஸார் வாகன சாரதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Landslide Hatton Colombo main road Traffic barrier