சென்னையுடன் மோதப்போகும் அணி எது? : கொல்கத்தா – ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை!

0
635
kolkata vs sunrisers hyderabad qualifier 2 news Tamil

(kolkata vs sunrisers hyderabad qualifier 2 news Tamil)

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறவுள்ள இரண்டாவது குவாலிபையர் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஷ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன.

முதல் குவாலிபையர் போட்டியில் சென்னை அணியை எதிர்கொண்டு விளையாடியிருந்த ஹைதராபாத் அணி, இறுதி நேரத்தில் பந்து வீச்சில் செய்த தவறுகளால் இறுதிப்போட்டியின் வாய்ப்பை இழந்தது.

எனினும் இரண்டாவது குவாலிபையர் மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறலாம் என்ற வாய்ப்பு இருந்ததால், ஹைதராபாத் அணி தப்பித்துக்கொண்டது. எனினும் இன்றைய தினம் அதே தவறினை செய்யுமானல் தொடரிலிருந்து வெளியேறுவதை தவிற வேறு வழியில்லை.

ஆரம்பத்தில் பலமான அணியாக வலம் வந்த ஹைதராபாத் அணி இறுதியாக நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்து பலமிழந்து போயுள்ளது. ஹைதரபாத் அணியின் மோசமான தொடர் தோல்வியாகவும் இந்த தோல்விகள் பதிவாகியுள்ளது.

எனினும் முட்டிமோதிக்கொண்டு பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்ற கொல்கத்தா அணி, இறுதி நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்று, ஹைதராபாத் அணிக்கு மிகப்பெரும் சாவாலை முன்னிருத்தியுள்ளது.

அதுமாத்திரமன்றி கொல்கத்தா அணியின் சொந்த மைதானம் என்பதால், ஹைதராபத் அணிக்கு அழுத்தம் அதிகம் என்றுதான் கூறவேண்டும்.

இதேவேளை அணி வீர்களை பொருத்தவரையில் இன்றைய போட்டியில் இரண்டு அணிகளும் மாற்றங்கள் இல்லாமல் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இன்றைய போட்டியானது இரண்டு அணிகளுக்கும் இறுதி வாய்ப்பு. வெற்றிபெற்றால் மாத்திரமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும். எனவே சென்னையுடன் மோதப்போவது யார்? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

<<Tamil News Group websites>>