யாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி இணைப்புக்களை துண்டிக்க நடவடிக்கை

0
1085
Cable TV connections disconnect action Jaffna

(Cable TV connections disconnect action Jaffna)
யாழ்ப்பாணம் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக வழங்கப்படும் கேபிள் ரிவி இணைப்புகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் அனுமதியளித்து கட்டளை வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்ளாமல் சட்டவிரோதமாக கேபிள் ரிவி இணைப்புகள் வழங்கப்படுகின்றன.

அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தொலைத்தொடர்பு ஓழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கொழும்பல் இருந்து சென்று முன்னெடுக்கவுள்ளனர்.

ஆணைக்குழுவின் இந்த நடவடிக்கைக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் சேவையையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸாரின் உதவியைப் பெற்று இந்த சட்டவிரோத நடவடிக்கையைக் கட்டுப்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவால் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

இதனை ஆராய்ந்த நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், சட்டவிரோத கேபிள் ரீவி இணைப்புக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்குவதாகக் கட்டளை வழங்கினார்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாநகரம் மற்றும் நல்லூர் பிரதேசம் உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத கேபிள் இணைப்புக்கள் துண்டிக்கப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்தது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Cable TV connections disconnect action Jaffna