Chief Minister Police Security increased response police shooting
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதன் எதிரொலியாக சென்னையிலுள்ள தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், துப்பாக்கிக்ச் சூட்டைக் கண்டித்து சென்னையில் கடந்த 3 நாட்களில் 75-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம், சாலை மறியல் நடைபெற்றுள்ளது. போராட்டக்காரர்கள் முதல்வர் வீட்டை முற்றுகையிட வாய்ப்புள்ளதாக உளவுப்பிரிவு பொலிஸார் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் வீடுகளிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Chief Minister Police Security increased response police shooting
More Tamil News
- திமுக தோழமை கட்சிகள் இன்று முழு கடை அடைப்பு!
- ரோஹிங்கிய அகதிகள் முகாமில் பிரியங்கா சோப்ரா!
- பெட்ரோல்,டீசல் விலையை குறைத்தால் மக்கள் நலத் திட்டங்கள் பாதிக்கும் – நிதின் கட்கரி!
- திமுக மீது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!
- ஸ்டெர்லைட் ஆலையை நானே அடித்து நொறுக்குவேன் – வைகோ ஆவேசம்!
- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது!
- ராகுல் – சோனியாவை சந்தித்த கமல்ஹாசன்!
- இணையதள சேவை முடக்கம் : நீதிமன்றத்தில் முறையீடு!
- வன்முறையை தூண்டும் வகையில் பேசிய சின்னத்திரை மீது வழக்கு!
Tamil News Group websites :