நஜிப் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 11 கோடியே 40 லட்சம்!

0
775
Najib house worth 11 crore 40 lakh, malaysia tami news, malaysia, malaysia news, najib

{ Najib house worth 11 crore 40 lakh }

மலேசியா: முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு சொந்தமானது என கூறப்படும் மூன்று ஆடம்பர அடுக்குமாடி வீடுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 11 கோடியே 40 லட்சம் ரிங்கிட் என புக்கிட் அமான் வர்த்தக குற்றப் புலானாய்வு துறை இயக்குனர் டத்தோ ஶ்ரீ அமர் சிங் இஷார் சிங் தெரிவித்துள்ளார்.

அந்த வீடுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 72 பைகளில் , தற்போது 35 பைகளில் உள்ள பணம் கணக்கிடப்பட்டுள்ளதாக அமர் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், எஞ்சிய 37 பைகளில் தங்க நகைகளும், கடிகாரங்களும் இருப்பதாக அமர் சிங் தெரிவித்துள்ளார்.

மே 21 ஆம் திகதி முதல் மே 23 ஆம் திகதி வ ரை அந்த பணம் கணக்கிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதில் மலேசிய நாணயம் மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் 26 வகையான நாணயங்கள் இருந்ததாக அவர் மேலும் கூறியுள்ளார்.

அந்த மூன்று வீடுகளில் ஒன்று நஜிப்பின் மகனுக்கும், மற்றொன்று நஜிப்பின் மகளுக்கும் சொந்தமானது என அமர் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், காலியாக இருந்த மூன்றாவது வீட்டில் அந்த பணம் மீட்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து தாங்கள் மேல் விசாரணை மேற்கொள்ள வேண்டியிருப்பதாக அமர் சிங் கூறியுள்ளார்.

கடந்த மே 18 ஆம் திகதி அந்த மூன்று வீடுகளிலும் பறிமுதல் செய்யப்பட்ட 72 பைகள் மற்றும் 284 பெட்டிகள் குறித்து சமூக ஊடங்களில் வெளிவந்த பண மதிப்பு மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் உண்மையானவை அல்ல அமர் சிங் தெரிவித்துள்ளார்.

அந்த அதிரடி சோதனைக்கு தலைமை வகித்த காமன்டர் ஒருவரைத் தவிர இதர போலீஸ்காரர்களிடம் கைதொலைப்பேசி இல்லை, எனவே சமூக ஊடங்களில் வெளிவரும் இந்த தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

Tags: Najib house worth 11 crore 40 lakh

<< RELATED MALAYSIA NEWS>>

*மலேசிய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.கள் சொத்து கணக்குகளை வெளியிட வேண்டும்..! வான் அஸீசா அறிவிப்பு

*மலேசியாவின் ஏழாவது பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார் ஜப்பான் பிரதமர்!

*தாபோங் ஹாஜி’ அமைப்பின் தலைவரான டத்தோஸ்ரீ அப்துல் அஷீஸ் அப்துல் ரஹீம் வீட்டில் அதிரடி சோதனை..!

*மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு மீண்டும் வருகை புரிந்தார் முன்னாள் பிரதமர் நஜிப்..!

*மலேசியாவில் கணவன்மார்களின் சம்பளத்திலிருந்து குடும்பப் பெண்களுக்கு இபிஎப் தொகை..!

*இந்தியரான பிரசாந்த்: முதலமைச்சர் அலுவலக சிறப்பு அதிகாரியாக நியமனம்..!

*MH370 விமானம் தேடும் பணி மீண்டும் தொடர்கின்றது..!

*என்னை உங்கள் சகோதரர் என்றே அழையுங்கள்..!

<<Tamil News Groups Websites>>