தாபோங் ஹாஜி’ அமைப்பின் தலைவரான டத்தோஸ்ரீ அப்துல் அஷீஸ் அப்துல் ரஹீம் வீட்டில் அதிரடி சோதனை..!

0
902
Talaban Haji chairman DatoSri Abdul, DatoSri Abdul, malaysia tami news, malaysia, malaysia news,

{ Talaban Haji chairman DatoSri Abdul }

மலேசியா: “என் வீட்டிலிருந்து, ஊழல் தடுப்பு ஆணையக (எம்.ஏ.சி.சி) அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படும் விலைமதிப்புள்ள கைக்கடிகாரங்களில் பெரும்பாலானவை போலியானவை.

அவை சாதாரணமாக பசாரில் வாங்கப்பட்டவை என்கின்றார் ‘தாபோங் ஹாஜி’ அமைப்பின் தலைவரான டத்தோஸ்ரீ அப்துல் அஷீஸ் அப்துல் ரஹீம்.

டத்தோஸ்ரீ அப்துல் அஷீஸின் வீட்டில் புகுந்து திடீர்ச் சோதனைகளை நடத்திய ஊழல் தடுப்பு அதிகாரிகள், 5 லட்சம் ரிங்கிட் , 12 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய அன்னிய கரன்சிகள், 20க்கும் மேற்பட்ட விலை மதிப்புள்ள கைக்கடிகாரங்கள், மற்றும் நகைகள் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

இதுகுறித்து, கருத்துரைத்த டத்தோஸ்ரீ அப்துல் அஷீஸ், அந்தக் கடிகாரங்களில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை போலி என்றும், என் வீட்டில் கைப்பற்றப்பட்ட 5 லட்சம் ரிங்கிட் ரொக்கம், அம்னோ பணம். அதன் வங்கிக் கணக்கிலிருந்து நோன்பு பெருநாள் விருந்துக்காக மீட்டேன் என்றும் கூறியுள்ளார்.

இதனிடையே, ‘தாபோங் ஹாஜி’ அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து தாம் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

பாலிங் தொகுதி எம்.பி.யுமான அப்துல் அஸிஸ், ஊழல் புரிந்ததாக சந்தேகிக்கப் படுகின்றார்.

Tags: Talaban Haji chairman DatoSri Abdul

<< RELATED MALAYSIA NEWS>>

*மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு மீண்டும் வருகை புரிந்தார் முன்னாள் பிரதமர் நஜிப்..!

*மலேசியாவில் கணவன்மார்களின் சம்பளத்திலிருந்து குடும்பப் பெண்களுக்கு இபிஎப் தொகை..!

*இந்தியரான பிரசாந்த்: முதலமைச்சர் அலுவலக சிறப்பு அதிகாரியாக நியமனம்..!

*MH370 விமானம் தேடும் பணி மீண்டும் தொடர்கின்றது..!

*என்னை உங்கள் சகோதரர் என்றே அழையுங்கள்..!

*இவ்வாரத்திற்கான எரிபொருள் விலையில் மாற்றமில்லை..!

*மலேசியா பிரதமர் மகாதீர் 15 ஆண்டுக்குப் பின்னர் பிரதமர் அலுவலகத்தில் மீண்டும்..!

*நஜீப்பின் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் கணக்கெடுப்பு தொடர்கின்றது!

<<Tamil News Groups Websites>>