(Nutritious tasty green chocolate cutlets)
மற்ற பயறுகளைவிட புரதச்சத்து நிறைந்தது பச்சைப் பயறு, உடலுக்கு வலுவூட்டும், சித்த மருத்துவத்தில் மருந்தாகப் பச்சைப் பயறு கருதப்படுகிறது. பைட்டோ கெமிக்கல்ஸ், ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகியவையும் இதில் நிறைந்திருக்கின்றன.
வளர் இளம் பருவத்தினர் அதிகம் எடுத்துக்கொள்ளலாம். இத்தக்கைய சிறப்பு வாய்ந்த பச்சைப் பயறு கட்லட் எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம். காலை உணவாக சத்தானதாகவும் சுவையானதாகவும் உண்பதற்கு பொருத்தமானது
செய்முறை: –
பச்சைப் பயறைத் தண்ணீரில் ஊறவைத்து, வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், கேரட், பீன்ஸ், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர், வேகவைத்த பச்சைப் பயறுடன் வதக்கிய பொருட்களைச் சேர்த்துக் கலக்க வேண்டும். இதனுடன், காய்ந்த பிரெட் தூள் சேர்த்து, வடை மாவுப் பதத்துக்குப் பிசைந்து, எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்து எடுக்க வேண்டும்.
இப்பொழுது சுவையான சத்தான கட்லட் தயார்.
tags:-Nutritious tasty green chocolate cutlets
<மேலும் பல சுவையான சமையல் குறிப்புகளுக்கு >>
காரமான சுவையான கொண்டைக்கடலை பிரட்டல்
சலங்கை பணியாரம் செய்து சந்தோஷமாக சாப்பிடுங்க…!