மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது

0
1217
Mava betel nut sales students

(Mava betel nut sales students Two arrested Jaffna)
யாழ்ப்பாண நகரப் பகுதியில் இயங்கிவந்த மோட்டார் சைக்கிள் திருத்தும் இடத்தில் பதுக்கி வைத்து, மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை செய்த இருவர் விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள தனியார் கல்வி நிலையமான பொருளியல் கல்லூரிக்கு அருகிலுள்ள மோட்டார் சைக்கிள் உரிமையாளரான மாணிக்கம் வசந்தகுமார் மற்றும் ஜெயசீலன் துசிலன் ஆகியோரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிவந்த மாவா வாக்கு விற்பனையகம் கடந்த மாதம் பொலிஸாரினால் அதிரடியாக முற்றுகையிடப்பட்டு, அங்கிருந்த பெரும் தொகையாக போதைப் பாக்குகள் மீட்கப்பட்டதோடு, இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதன் பின்னர் குறித்த மாவா பாக்கினை வெளிமாவட்டத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவந்து, குறித்த திருத்தகத்தில் பதுக்கி வைத்து மாவணர்வகள் உட்பட இளைஞர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதுதொடர்பில் யாழ். பொலிஸ் உயர் அதிகாரிக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் குறித்த இடத்திற்குச் சென்ற இரகசிய பொலிஸார் திருத்தகத்தில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது அங்கு விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 132 கிராம் மாவை பாக்கினை மீட்டுள்ளனர்.

இதன்பின்னர் அந்தத் திருத்தகத்தில் உரிமையாளரையும், அவருடைய உறவினர் ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று சான்றுப் பொருட்களுடன் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Mava betel nut sales students Two arrested Jaffna