பேஸ்புக் மீது அழுத்தத்தை பிரயோகிக்கும் பிரான்ஸ்!

0
688
Facebook chief face pressure from_Macron

பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி Mark Zuckerberg புதனன்று (நேற்று) இமானுவேல் மேக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அங்கு அவர் தனது நிறுவனத்தின் வரிக் கொள்கைகள் மீது புதிய அழுத்தத்தை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. Facebook chief face pressure from_Macron

Macron நேற்று புதன்கிழமை ஒரு மாநாட்டில் Mark மற்றும் 50 க்கும் மேற்பட்ட மற்ற உயர் தொழில்நுட்ப நிறுவனங்களுடனும் பேச்சு வார்த்தை நடத்தினார். இது அவர்களின் உலகளாவிய செல்வாக்கை பொது நலனுக்கு பயன்படுத்துவதற்கு அவர்களைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்ட மாநாடு.

மேலும், பேஸ்புக் மற்றும் பிற நிறுவனங்களும் இந்த வாரம் புதிய ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளை எதிர்கொள்கின்றன. மக்ரோன் வலைதள ஜாம்பவான்களை ஒழுங்குபடுத்தும் முயற்சிகளை பற்றி இம் மாநாட்டில் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.

அதற்கு முதல், பயனர்களின் முகப்புத்தக தகவல்களை கசியவிட்டதற்காகவும் மற்றும் தவறான செய்தியை நீக்குதல் தோல்வியுற்றதன் காரணமாகவும் செவ்வாயன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் Zuckerberg மன்னிப்பு கோரியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலின் போது பேஸ்புக் பயன்படுத்திய 5 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. திருடப்பட்ட தகவல்கள் அனைத்தும் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

இதனால் பேஸ்புக் நிறுவனம் தனது பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை எந்த அனுமதியுமின்றி சோதனை செய்திருப்பதாக பெரும் சர்ச்சை எழுந்தது. இதில் சுமார் 30 லட்சம் ஐரோப்பியர்களின் பேஸ்புக் தகவல்களும் கசியவிடப்பட்டது எனத் தெரியவந்தது.

இதனால் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் பேஸ்புக் நிறுவனம் மீது வழக்குப் பதியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**