(Dom Bess international debut vs Pakistan)
பாகிஸ்தான் அணிக்கெதிராக இன்று நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில் அறிமுக சுழற்பந்து வீச்சாளரை களமிறக்கவுள்ளதாக இங்கலாந்து அணி தெரிவித்துள்ளது.
இங்கலாந்து கவுண்டி அணியான சமரெஷ்ட் அணிக்காக விளையாடி வரும் 20 வயதான இளம் சுழற்பந்து வீச்சாளர் டொமினிக் பெஸ் இவ்வாறு களமிறக்கப்படவுள்ளார்.
16 உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ள டொமினிக் பெஸ், இங்கிலாந்து அணியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக பதிவாகியுள்ளார்.
இவரது வருகை தொடர்பில் இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் கருத்து தெரிவிக்கையில்,
“டொமினிக் பெஸ் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார். இன்றைய போட்டிக்காக உற்சாகத்துடன் காத்திருக்கிறார்.
இவரது பந்து வீச்சு பாணி ஈர்க்கத்தக்கதாக உள்ளது. இதேவேளை இன்று மைதானத்தில் எவ்வாறு செயற்பட போகின்றார் என்பதை பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
டொமினிக் பெஸ் இதுவரையில் 16 உள்ளூர் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள நிலையில், 63 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
- இலங்கை வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!! : மாலிங்கவுக்கு மீண்டும் ஏமாற்றம்!!!
- இத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்!
- இந்தியாவிலிருந்து விடைபெறுவதற்கு முன் பகிரங்க மன்னிப்புக் கோரிய வில்லியர்ஸ்!
- உண்மையில் இதுதான் அற்புதமான பிடியெடுப்பு!!! : ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த வில்லியர்ஸ்! (காணொளி)
- இத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை நோக்கி நகரும் நடால்!
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- கனடாவில் விளையாடவுள்ள ஸ்டீவ் ஸ்மித்… : சற்றுமுன்னர் கிடைத்த தகவல்…
- மென்செஸ்டர் சிட்டி பயிற்றுவிப்பாளரின் ஒப்பந்தக்காலம் நீடிப்பு!
- அறிவிக்கப்பட்டது உலக பதினொருவர் அணி! : வீரர்களின் முழுவிபரம் இதோ!
<<Tamil News Group websites>>