(7 girl students sexual abused jaffna tellipalai)
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் தரம் 7 இல் கல்வி கற்கும் 12 வயது மாணவிகள் ஏழு பேரை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியரொருவர் இன்று தெல்லிப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பாடசாலையின் கணித பாட ஆசிரியரான செல்வரத்தினம் சத்தியநாராணயன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் பல சந்தர்ப்பங்களில் குறித்த 7 மாணவிகளையும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் இது தொடர்பில் எவருக்கும் தெரிவிக்கக் கூடாது என குறித்த மாணவிகளை அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் , குறித்த ஆசிரியரின் தொடர் தொந்தரவு காரணமாக பொறுத்துக்கொள்ள முடியாத மாணவியொருவர் இது தொடர்பில் அவரின் பெற்றோருக்கு அறிவித்துள்ளதை தொடர்ந்து , மாணவியின் பெற்றோர் ஆசிரியருக்கு எதிராக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து தெல்லிப்பளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மற்றைய மாணவிகளும் தமக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவித்ததை தொடர்ந்து குறித்த ஆசிரியர் உடனடியாக தெல்லிப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட கணித ஆசிரியர் இன்றைய தினம் யாழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில் , சந்தேகநபரான ஆசிரியருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குறித்த மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- 35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்
- ‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி!
- தெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை
- கொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்
- சீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு (முழு விபரம் இதோ)
- இலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் : அச்சத்தில் இந்தியா, பதிலளித்தது சீனா
- கோத்தாவும், பசிலும் அமெரிக்காவில் இரகசியமாக செய்யும் செயல் : பகிரங்கபடுத்த வேண்டும்
-
-
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:7 girl students sexual abused jaffna tellipalai,7 girl students sexual abused jaffna tellipalai,
-