பிரான்ஸில் பயணிப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி!

0
740
50 percentage discount Ile-de-France Mobilités travellers

கடந்த சில மாதங்களாக பிரான்ஸின் அனைத்து பகுதிகளிலும் தொழில் துறை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதைத் தொடர்ந்து, பாதிப்புக்குள்ளான பயணிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க தீர்மானித்துள்ளதாக இல்-து-மாகாண முதல்வர் தெரிவித்துள்ளார். 50 percentage discount Ile-de-France Mobilités travellers

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நவிகோ பயண அட்டை பெற்றவர்கள், தங்கள் பயணங்களின் போது ஏற்பட்ட தடங்கலுக்காக, ஜூன் மாத நவிகோ அட்டையை 50 வீத கழிவுடன் பெற்றுக்கொள்ளலாம் என இல்-து-பிரான்ஸுக்கான பொது போக்குவரத்துக்களுக்கான ( Ile-de-France Mobilités ) முதல்வர் Valérie Pécresse தெரிவித்துள்ளார்.

ஜூன் மாத அட்டைக்கு மாத்திரம் தற்போது இந்த விலைக்கழிவு அறிவிக்கப்பட்டுள்ளது என்றபோதும், அதன் பின்னரான மாதங்களிலும் இவ் விலைக்கழிவு நீடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**