புதிய பயிற்றுவிப்பாளரை நியமித்தது அர்செனல்!

0
596
Unai Emery named Arsenal new Manager

(Unai Emery named Arsenal new Manager)

இங்கிலாந்தின் பிரபல உதைப்பந்தாட்ட கழகமான அர்செனல் கழகத்தின் பயிற்றுவிப்பாளராக, பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளரான உனெய் எம்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடயத்தினை அர்செனல் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரி, இவன் கஷிடிஷ் அறிவித்துள்ளார்.

46 வயதான உனெய் எம்ரி பிரன்ச் சம்பியன் அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு லீக் 1 கிண்ணத்தை கைப்பற்றும் வரையில் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டார்.

அதுமாத்திரமின்றி 2016ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டுவரை பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை சிறப்பாக வழிநடத்திச் சென்றுள்ளார்.

அர்செனல் அணியின் பயிற்றுவிப்பாளராக 22 வருடங்கள் செயற்பட்ட அர்சென் வெங்கர் பதவி விலகியதை தொடர்ந்து அவரின் இடத்துக்கு உனெய் எம்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

<<Tamil News Group websites>>