அழிவுக்குள்ளான கோவில்களை மீளமைக்க சீமெந்து வழங்கிய இராணுவம்

0
637
tamilnews Defense Commander plans temples war zones Jaffna district

(tamilnews Defense Commander plans temples war zones Jaffna district)

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைக் கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் திட்டமிடலுக்கு அமைய யாழ் மாவட்டத்தில் யுத்த அழிவுகளுக்குள்ளான கோவில்களை புதுப்பிக்கும் பணிகளுக்காக உபகரணங்களும், மூலப்பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதன்கீழ் 30 கோவில்களுக்கான 600 பைக்கற் சீமெந்துகளை வழங்கும் நிகழ்வு இன்று (23) வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின் முன்றலில் நடைபெற்றது.

இந்த நிகழ்விலே யாழ் மாவட்ட பாதுகாப்புபடை கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் தர்ஷன
ஹெட்டியாராச்சியின் தலைமையில் அன்பளிப்பை பங்கிடும் பொறுப்பினை பிரதேசத்தை சேர்ந்த பிரமுகர்கள் ஏற்றிருந்தனர்.

அதன்போது கோவில் குருமார்கள் மற்றும் இராணுவ சிரேஸ்ட அதிகாரிகளும் பிரதேச மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

(tamilnews Defense Commander plans temples war zones Jaffna district)

More Tamil News

Tamil News Group websites :