சீரற்ற காலநிலை : தெய்வாதீனமாக உயிர்தப்பிய 500 பேர் : ஹோமாகமவில் சம்பவம்

0
1109
500 passengers escape train accident

(500 passengers escape train accident)
சீரற்ற காலநிலை காரணமாக களனிவெலி பாதையில் ​நேற்றிரவு ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து அவிசாவளை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயில் ஒன்றே நேற்று மாலை இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

ஹோமாகம – பன்னிப்பிட்டியவுக்கு இடைப்பட்ட பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ரயில் திடீரென்று தடம்புரண்டபோது அதில் ஐநூறுக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். எனினும் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

தடம்புரண்ட ரயிலை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக தற்போதைக்கு களனிவெலிப் பாதை ரயில் போக்குவரத்து நுகேகொடை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த ரயில் ​சேவையை நம்பியிருந்த ஏராளமான அரசாங்க மற்றும் தனியார் ஊழியர்களுக்கு இன்று பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :