வரலாற்றில் மிக மோசமான பாலியல் துஷ்பிரயோகம்: மருத்துவ மாணவிக்கு நடந்த கொடூரம்

0
1629
Brisbane Australia Rape Verdict

Brisbane Australia Rape Verdict

யுவதியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இரண்டு பேருக்கு பிரிஸ்பேன் மாவட்ட நீதிமன்றம் சுமார் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

பிரிஸ்பேனைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களுக்கே இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு பேரும், மருத்துவம் பயிலும் மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

தண்டனை பெற்றுள்ள ரயன் டேவிட் ஜோர்ஜ் என்ற 33 வயதானவர் எனவும், மற்றையவர் 26 வயதான ஜெக் ஸ்கொட் டேர்னர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2011 ஆம் ஆண்டு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற மிகமோசமான வல்லுறவுச்சம்பவமாக இது கருதப்படுகின்றது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் அப்போது 20 வயதானவர் எனவும், வல்லுறவின் போது அவருக்கு கடும் இரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த யுவதி குடிபோதையில் இருந்த போது அவரை மயக்கி அழைத்துச் சென்றே குற்றம் புரியப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் இருவரும் குற்றம் இடம்பெற்று சுமார் 5 வருடங்களின் பின்னரே கைதுசெய்யப்பட்டிருந்தனர். சி.சி.டிவி காணொளி மற்றும் அதனூடாக கிடைத்த ரகசியத் தகவல்கள் மற்றும் சம்பவ இடத்தில் இருந்த சிகரெட்டின் டி.என்.ஏ, பெண்ணின் உள்ளாடை ஆகியனவே குற்றத்தை கண்டுபிடிக்க உதவியாக இருந்துள்ளன.