கள்ளக்காதல் ; வயோதிபர் மீது முறைப்பாடு; கத்தியால் குத்திய மகன்

0
823
Improper romantic relationship

(Improper romantic relationship Complaint elderly)
தனது தந்தைக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பெண்ணை நபரொருவர் கத்தியால் குத்திய சம்பவமொன்று ஆரச்சிக்கட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுளள்து.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நடுத்தர வயதுடைய நபரொருவர் அதே பகுதியை சேர்ந்த 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான பெண்ணின் உடம்பை தொட்டு தவறாக நடந்துகொள்ள முயற்சித்தார் எனக் கூறி குறித்த பெண்ணினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த முறைப்பாட்டை அடுத்து, குறித்த நபரை பொலிஸார் கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த கைது செய்யப்பட்ட நபரின் 20 வயது மகன் முறைப்பாடு கொடுத்த பெண்ணை கத்தியால் குத்தியுள்ளார்.

படுகாயமடைந்த பெண், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த பெண்ணின் கணவன் வெளிநாடு சென்றுள்ளார். இந்தப் பெண்ணுக்கும் நடுத்தர வயதுடைய நபரின் மகனுக்கும் இடையில் கள்ளத் தொடர்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த கள்ளத்தொடர்ப்பை நிறுத்துமாறு அறிவுரை கூறவே நடுத்தர வயதுடைய நபர் அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இதனால், கோபமடைந்த குறித்த பெண் நடுத்தர வயதுடையவர் மீது முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கத்தியால் குத்திய நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் ஆரச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Improper romantic relationship Complaint elderly