இன்றைய ராசி பலன் 23-05-2018

0
654
Today horoscope 23-05-2018
(Today horoscope 23-05-2018)

மேஷ ராசி நேயர்களே !
இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். பெண்கள் விருந்து விழாவில் பங்கேற்று மகிழ்வர்.

ரிஷப ராசி நேயர்களே !
உங்களின் எதார்த்த பேச்சு பிறரை சங்கடப்படுத்தலாம். தொழில் வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் வீட்டுச் செலவுக்கு திண்டாட நேரிடலாம். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்வது நல்லது.

மிதுனம் ராசி நேயர்களே !
குடும்பத்தினரிடம் விவாதம் செய்ய வேண்டாம். திட்டமிட்ட பணிகளைத் தாமதமின்றி நிறைவேற்றுவது நல்லது.தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். வீடு, வாகன வகையில் மராமத்துச் செலவு உண்டாகும்.

கடக ராசி நேயர்களே !
நண்பர்களால் உதவி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் உறவினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். அரசியல்வாதிகள் திடீர் பயணம் மேற்கொள்வர்.

சிம்ம ராசி நேயர்களே !
நல்லவர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடும்.

கன்னி ராசி நேயர்களே !
வீண் பேச்சை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் தடை குறுக்கிடலாம். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாக நேரிடலாம். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்.நண்பரால் உதவி உண்டு.

துலாம் ராசி நேயர்களே !
தகுதிக்கு மீறி வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். விஷப் பிராணிகளிடம் விலகுவது நல்லது. பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை.

விருச்சிகம் ராசி நேயர்களே !

மனதில் நல்லெண்ணம் அதிகரிக்கும். உறவினர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்ததில் வருமானம் திருப்தி அளிக்கும். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். குடும்பத்தில் சுபவிஷயம் குறித்த பேச்சு நடக்கும்.

தனுசு ராசி நேயர்களே !
குடும்ப சிரமத்தைப் பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் வருமானம் மிதமாக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். பெண்களுக்கு சகோதர வழியில் உதவி கிடைக்கும். பாதுகாப்பு குறைவான இடங்களுக்குச் செல்ல வேண்டாம்.

மகர ராசி நேயர்களே !
மனச்சாட்சிக்கு முக்கியத்துவம் தருவீர்கள். திட்டமிட்ட பணி ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழில் வியாபார வளர்ச்சியால் லாபம் உயரும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். மனைவியின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.

கும்பம் ராசி நேயர்களே !
காலத்தின் அருமை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். நிலுவைப் பணம் விடாமுயற்சியால் வசூலாகும். உடல்நலனில் அக்கறை தேவை. பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர்.

மீனம் ராசி நேயர்களே !
மனதில் இருந்த தயக்கம் விலகும். அன்றாடப் பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வளர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

மேலும் பல சோதிட தகவல்கள்   

 

Keyword:Today horoscope 23-05-2018