வாள்வெட்டு தாக்குதல் நடத்தியவர்களை சாட்சிகள் அடையாளம் காட்டவில்லை

0
558
tamilnews jaffna neerveli courts identification parade suspects

(tamilnews jaffna neerveli courts identification parade suspects)

நீர்வேலி ஆலய வளாகத்தில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய வழக்கின் சந்தேகநபர்கள் மூவரையும் சாட்சிகள் இருவரும் அடையாளம் காணவில்லை.

சந்தேகநபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.

தாக்குதலுக்குள்ளான இருவரும் சாட்சிகளாக முற்படுத்தப்பட்டனர்.

இதன்போது, சாட்சிகளால் சந்தேக நபர்களை அடையாளம் காட்டமுடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சம்பவத்தின் போது தாக்குதலை மேற்கொண்டவர்கள் முகத்தை மூடி துணி கட்டியிருந்ததால் சரியாக அடையாளம் காணமுடியவில்லை” என்று சாட்சிகள் மன்றில் தெரிவித்தனர்.

இந்தநிலையில், சந்தேகநபர்கள் மூவரையும் வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் கடந்த 7 ஆம் திகதி இளைஞர்கள் இருவர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டது.

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த அப்புத்துரை கிரிசன் (வயது -23) என்ற இளைஞன் கழுத்தில் வெட்டுப்பட்டும் கிரிகேசன் (வயது -23) காலில் படுகாயமடைந்தனர்.

(tamilnews jaffna neerveli courts identification parade suspects)

More Tamil News

Tamil News Group websites :