ஒரே நேரத்தில் பலியாகவிருந்த பல பெற்றோர்களும், பிள்ளைகளும் : யாழில் அதிர்ச்சி சம்பவம்

0
2256
men death accident rathgama railway crossing Tamil latest news

(parents students escaped jaffna train accident)
ரயில் பய­ணித்­த­போது கடவை மூடப்­ப­டா­த­தால் பாத­சா­ரி­கள் ரயிலிருந்து நூலி­ழை­யில் உயிர் தப்­பி­ய அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.

யாழ்ப்­பா­ணம் புங்­கன்­கு­ளம் வீதி­யி­லுள்ள ரயில் கட­வை­யில் நேற்று பகல் 1.47க்கு இடம்­பெற்­ற இந்த சம்பவத்தில் உயிர்தப்பிய பெற்றோர் சம்பவம் தொடர்பில் விபரிக்கையில்,

ரயில் பய­ணித்­ததை எவ­ரும் கவ­னிக்­க­வில்லை. ரயில் ஒலி (ஹோர்ன்) எழுப்­ப­வு­மில்லை. பாட­சாலை நிறை­வ­டைந்து பிள்­ளை­க­ளு­டன் பெற்­றோர் விரைந்து கொண்­டி­ருந்­த­னர். கட­வை­யைக் கடந்­த­போது ரயில் வந்து கொண்­டி­ருந்­தது.

கட­வைக் காப்­பக கடவை போடப்­ப­ட­வில்லை. அத­னால் ரயில் வர­வில்லை என்று கருதி பிள்ளைகளுடன் ரயில் கடவையை கடந்தோம்.

இதன்போது திடீரென ரயில் எம்மை கடந்து சென்றது. ஒரு நூலி­ழை­யில் நாங்களும் எமது பிள்ளைகளும் உயிர் தப்பினோம் என்றனர்.

எனினும் இருவர் தடுமாறி விழுந்து மயக்கமுற்ற நிலையில் கிடந்தனர்.

இந்த சம்பவத்தால் குறித்தப் பகுதியில் சற்று அமைதியின்மை ஏற்பட்டது.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் ரயில் கட­வைக் காப்­பா­ளர் சங்­கத் தலை­வர் றொகான் கருத்து தெரிவிக்கையில்,

‘தமது சங்­கத்­தின் உறுப்­பி­னர் ஒரு­வர் அதில் கட­மை­யில் இருந்­தார். பணிப்­பு­றக்­க­ணிப்­புக் கார­ண­மாக அவர் அதில் தற்­போது கட­மை­யில் இருப்­ப­தில்லை என்றார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை