செக்கச் சிவந்த வானம் படம் குறித்த புதிய தகவல் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

0
605
Chekka Chivantha Vaanam movie New Update,Chekka Chivantha Vaanam movie New,Chekka Chivantha Vaanam movie,Chekka Chivantha Vaanam,Chekka Chivantha

(Chekka Chivantha Vaanam movie New Update)

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “செக்கச் சிவந்த வானம்”.

இப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதி அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப் படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் இணைந்து நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், அரவிந்த்சாமி, ஐஸ்வர்யா ராஜேஷ் அருண் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழு முடித்துவிட்ட நிலையில், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. சிம்புவும் சமீபத்தில் துபாய் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார்.

இந் நிலையில், விஜய் சேதுபதியும் அவரது காட்சிகளை நடித்து முடித்து விட்டாராம். ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட இருக்கும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. அத்துடன் இப்படத்தை வருகிற அக்டோபரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

<MOST RELATED CINEMA NEWS>>

கேன்ஸ் பட விழாவில் பிரபல தயாரிப்பாளர் என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார் : நடிகை அதிர்ச்சித் தகவல்..!

கசிந்தது 2.0 படத்தின் கதைக்கரு : எதிர்பார்ப்பின் உச்சக் கட்டத்தில் ரசிகர்கள்..!

கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய பிரபல நடிகை : பரபரப்புத் தகவல்..!

தமிழ் இயக்குனரின் வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை..!

பலகாலம் செய்துவந்த வேலையைத் தூக்கிப்போட்ட ராக்ஸ்டார் ரமணியம்மாள் : இதற்குத்தானா..?

விஜய் 62 படம் குறித்த சுவாரஸ்ய தகவல்..!

சோனம் கபூரின் மெஹந்தி நிகழ்வில் அம்மாவை நினைத்து கண்கலங்கிய ஜான்வி..!

லிசாவாக மாறி கதி கலங்க வைக்கும் அஞ்சலியின் திகில் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

ஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..!

Tags :-Chekka Chivantha Vaanam movie New Update

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

பியகமவில் 6 வாகனங்கள் மீட்பு