4.7 மில்லியன் பெறுமதியான தங்கக்கட்டிகளுடன் இருவர் கைது

0
778
Two arrested 4.7 million worth gold

(Two arrested 4.7 million worth gold)
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 4.7 மில்லியன் பெறுமதியான தங்கக்கட்டிகளை சட்டவிரோதமாக கடத்த முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த மாத்தறை பகுதியை சேர்ந்த 55 வயதுடைய ஒருவரும், மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த 52 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரிடம் இருந்து 700 கிராம் எடையுடைய 47 இலட்சத்து 60 ஆயிரம் பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

போலியான பட்டிகளிலும் பாதணியின் கீழும் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக்கட்டிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Two arrested 4.7 million worth gold