மும்பை அணித் தலைவரின் மோசமான துடுப்பாட்ட சாதனை!

0
862
rohit sharma ipl 2018 runs news Tamil

(rohit sharma ipl 2018 runs news Tamil)

ஐ.பி.எல். தொடரில் நடப்பு சம்பியனான மும்பை அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது.

மும்பை அணி வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ள நிலையில், மும்பை அணியின் தலைவர் ரோஹித் சர்மாவுக்கும் மோசமான சீசனாக இவ்வருடம் அமைந்துள்ளது.

ஐ.பி.எல். தொடரை பொருத்தவரையில் ரோஹித் சர்மா 300 ஓட்டங்களை கடக்காத முதல் சீசனாக இந்த சீசன் பதிவாகியுள்ளது.

14 போட்டிகளில் விளையாடிய ரோஹித் சர்மா 23.83 என்ற சராசரியில் 286 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொடுத்துள்ளார்.

இதற்கு முன்னைய சீசன்களில் கிட்டத்தட்ட 300 ஓட்டங்களை ரோஹித் சர்மா கடந்திருந்ததுடன், ஐந்து சீசன்களில் 400 ஓட்டங்களை எட்டியிருந்தார். எனினும் இந்த சீசனில் ரோஹித் சர்மா பிரகாசிக்கவில்லை.

கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் 19 போட்டிகளில் விளையாடியிருந்த சர்மா 538 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

எனினும் ஐ.பி.எல். தொடரின் வரலாற்றை பொருத்தவரையில், ரோஹித் சர்மாவின் மோசமான துடுப்பாட்ட வெளிப்படுத்தலாக இந்த சீசன் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>

 

rohit sharma ipl 2018 runs news Tamil