பரிஸில் IS தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் மனைவி விடுதலை!

0
460
Paris knife attack related 2 ladies released

பரிஸில் கடந்த வாரம் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு பெண்கள், குற்றமற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். Paris knife attack related 2 ladies released

குறித்த இரு இளம் பெண்களும் பரிஸில் தாக்குதல் நடத்தியிருந்த பயங்கரவாதி Khamzat Azimov உடன் தொடர்புடையவர்கள் என சந்தேகித்து கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார்கள். கைது செய்யப்பட்டதிலிருந்து தொடர்ச்சியான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இரு பெண்களும் கடந்த சனிக்கிழமை விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இவர்களுக்கு முன்னதாக கைது செய்யப்பட்டிருந்த குறித்த பயங்கரவாதியின் நண்பன் Abdoul Hakim A, கடந்த வியாழக்கிழமை சிறையிலடைக்கப்பட்டுள்ளான். இந்த பரிஸ் தாக்குதல் வழக்கில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதை தவிர, Abdoul Hakim A. என்பவன் மட்டுமே தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளான்.

மேலும், கைது செய்யப்பட்ட இரு பெண்களில், 19 வயதுடைய ஒருவர் பயங்கரவாதி Khamzat Azimov இன் மனைவி என்பதும், முன்னதாக கைது செய்யப்பட்ட பயங்கரவாதியின் பெற்றோர்கள் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**