நினைவேந்தல் குளறுபடிகளில் சிதைக்கப்படும் ஆன்ம உணர்வு!

0
807
Mullivaikkal Remembrance Day Issues Should Correct Next Year

(Mullivaikkal Remembrance Day Issues Should Correct Next Year)

கடந்த 18 ஆம் திகதி இறுதி யுத்தத்தில் அநியாயமாக கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூறும் நிகழ்வு முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் ஒழுங்கமைப்பு ஆரம்பமான நாள் முதல் இதில் பங்கெடுக்கும் தரப்புகள் தொடர்பில் தொடர்ச்சியான சர்ச்சைகள் நிலவி வந்தமை தொடர்பில் பலரும் தமது வருத்தத்தை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நிகழ்வை அனைவரும் ஒருமித்து அனுஷ்டிக்கும் வண்ணம் அதன் ஒருங்கமைப்பை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கையில் எடுத்து கொண்ட விடயம் பெரும் வாத பிரதிவாதங்களை எழுப்பிவிட்டுள்ளது.

உண்மையில் இந்த நிகழ்வை பல்கலைக்கழக மாணவர்கள் தமது தலைமையில் நடத்தி முடித்துள்ளமை வரவேற்கதக்க விடயமே. காரணம் எமது விடுதலைப்போராட்டத்தின் ஆணிவேராக யாழ் பல்கலைக்கழகமே விளங்கி வந்தது.

அதுமட்டுமன்றி , எமது இனத்தின் வரலாறுகளை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்லும் முக்கிய ஊடகமாக இந்த பல்கலைக்கழகமே அன்று தொடக்கம் விளங்கி வருகின்றது.

ஆனால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சரியான தகுதியுள்ளவர்கள் சில ஆலோசனைகளை வழங்கவேண்டியது அவசியமாகின்றது.

இம்முறை நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் சில குளறுபடிகள் இடம்பெற்றிருந்தமை தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படவேண்டிய நிகழ்வு. இதில் முன்னெடுக்கப்படும் விடயங்கள் மிகவும் எளிமையாக இருத்தல் அவசியம்.

Image may contain: one or more people, people standing, sky, outdoor and nature

அடுத்த விடயம் , நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் தரப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படாமை ஒரு விதத்தில் சரியான நடைமுறை என்றாலும் முன்னாள் போராளி துளசியின் அரசியல் செயற்பாடுகள் காரணமாக அவர் பொது வெளியில் அவமானப்படும் விதமாக அவரை ஓரம் கட்டிய விடயம் மிகவும் கண்டனத்துக்குரியது.

இவை போன்ற சில விடயங்கள் திருத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு அடுத்த வருடம் இடம்பெற கூடியதாக அதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட அனைத்து தரப்புகளும் முன்வர வேண்டும். காரணம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எமது இனத்தின் அழிவுகளின் ஒட்டு மொத்த அடையாளம் அதை மங்கி போகாத உணர்வுடன் அனுஷ்டிக்கவேண்டியது எமது தலையாய கடமையாகும்.

ஏனைய செய்திகள்

பிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்!

கருணாவின் காட்டி கொடுப்புக்கு கூட்டி கொடுத்த அலிசாஹிர் மௌலானாவுக்கு கிடைத்த பரிசு!

கூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி!

முஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா?

முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்!

பிற தளங்கள்

Tamilworldnews.com

சமுகவளைத்தள பக்கங்கள் 

நெற்றிக்கண் முகப்பு