{ Legal action kevis Muglin warning }
மலேசியா: மைபிபிபி கட்சியிலிருந்து டான்ஶ்ரீ எம்.கேவியஸ் நீக்கப்பட்டுள்ளார் என்பதை அக்கட்சி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 25-ஆம் திகதியன்று, அக்கட்சியின் (முன்னாள்) தலைவரான கேவியஸ் நீக்கப்பட்டார் என்று மைபிபிபியின் இடைக்கால தலைவர் டத்தோஶ்ரீ மேக்லின் டி’குரூஸ் தெரிவித்துள்ளார்.
தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து, மைபிபிபி கட்சி வெளியேறுகிறது என்று கேவியஸ் அனுப்பிய கடிதம் குறித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தாம் தனது கட்சி வழக்கறிஞர்களை கேட்டுக் கொண்டுள்ளதாகவும், மேக்லின் கூறியுள்ளார்.
“தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து வெளியேறும் எவ்வித முடிவையும், மைபிபிபி கட்சி எடுக்கவில்லை. மைபிபிபியின் விதிமுறைகளை மீறியதன் தொடர்பில், கட்சியின் அரசியலமைப்பு விதிமுறையின் படி, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர்.
“கட்சி விவகாரம் தொடர்பில், மக்களுக்கு எவ்வித குழப்பமும் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில், நான் மீண்டும், கேவியஸ் நீக்கப்பட்டுள்ளார் என்பதை அறிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
இதனிடையில், தேசிய முன்னணி கூட்டணியில் தொடர்ந்து மைபிபிபி இடம் பெறுமா என்பது குறித்து, அக்கட்சியின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் தான் முடிவெடுக்கப் படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கட்சி உறுப்பினர்கள் அனைவரின் கருத்துகளையும் ஆராய்ந்த பின்னரே, அது குறித்து முடிவெடுக்கப் படும் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
Tags: Legal action kevis Muglin warning
<< RELATED MALAYSIA NEWS>>
*பினாங்கில் பிரிட்டிஷ் பிரஜையை கொடூரமாக தாக்கிய இருவர் கைது..!
*மலேசியரான எவரெஸ்ட் நாயகன் ராமன் நேப்பாளில் சடலமாக மீட்பு..!
*அஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..!
*1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு!
*அமைச்சராக விருப்பம் இல்லை! லிம் கிட் சியாங்
*மூன்றே நாளில் பொருளாதாரம் வலுவாகி விட்டதா?- பக்காத்தானுக்கு நஜிப் கேள்வி
*நஜிப் மீதான விசாரணை நியாயமான முறையில் நடத்தப்படும்! அன்வார் அறிவிப்பு
*மகாதீரைச் சந்தித்தார் சிங்கப்பூர் பிரதமர்..!
*நஜிப் வீட்டில் 20 ஆண்டு திறக்கப்படாத இரும்புப் பெட்டிக்குள் இருந்தது என்ன?