மலேசியரான எவரெஸ்ட் நாயகன் ராமன் நேப்பாளில் சடலமாக மீட்பு..!

0
820
Everest Raman Nepal dead body recovery , malaysia tami news, malaysia, malaysia news, Everest Raman,

{ Everest Raman Nepal dead body recovery }

மலேசியா: கடந்தாண்டு எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்த மலேசியரான ராமன் நாயர் அச்சுத்தன் (வயது 42) நேப்பாளிலுள்ள ஒரு மலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிழக்கு நேப்பாளத்தில் உள்ள ஹிமாலயா பகுதியில் அமைந்திருக்கும் ஆமா டப்ளம் எனும் மலையில் ராமன் நாயரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஹிமாலயன் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த மே 15ஆம் திகதி அவர் மலையேறும் போது காணாமல் போனதாகவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மே 20ஆம் திகதி கடல் மட்டத்திலிருந்து 5300 மீட்டர் உயரத்தில் ராமனின் உடல் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

ராமன் நாயரின் நெருங்கிய நண்பரான கே.நாகராஜூ ராமனின் தந்தை தற்போது நேப்பாளில் இருப்பதாகவும் அவரது உடலை மலேசியாவிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை அவர் கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ராமன் நாயரின் இறுதி சடங்கு வரும் புதன்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆயினும், இது ராமன் நாயரின் சவபரிசோதனை மற்றும் நேப்பாள் சட்டப்பூர்வ நடவடிக்கைகளைச் சாந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஷா ஆலமைச் சேர்ந்த ராமன் நாயர் கடந்தாண்டு மே மாதம் 20ஆம் திகதி எவரெஸ்ட் சிகரத்தை அடைத்து சாதனை புரிந்தார். தன்னுடைய கடுமையான உழைப்பிற்கு பின்னர் இந்த வெற்றி கிடைத்ததாகவும் அதை நினைத்து பெருமையடைவதாகவும் அவர் அப்போது கூறியிருந்தார்.

ராமன் நாயரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்றும் அவரது இழப்பு மலை ஏறும் சமூகத்திற்கு மிக பெரிய இழப்பாக இருப்பதாகவும் நாகராஜூ குறிப்பிட்டுள்ளார்.

Tags: Everest Raman Nepal dead body recovery

<< RELATED MALAYSIA NEWS>>

*அஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..!

*1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு!

*அமைச்சராக விருப்பம் இல்லை! லிம் கிட் சியாங்

*மூன்றே நாளில் பொருளாதாரம் வலுவாகி விட்டதா?- பக்காத்தானுக்கு நஜிப் கேள்வி

*நஜிப் மீதான விசாரணை நியாயமான முறையில் நடத்தப்படும்! அன்வார் அறிவிப்பு

*மகாதீரைச் சந்தித்தார் சிங்கப்பூர் பிரதமர்..!

*நஜிப் வீட்டில் 20 ஆண்டு திறக்கப்படாத இரும்புப் பெட்டிக்குள் இருந்தது என்ன?

*பணிப்பெண் கற்பழித்த குற்றத்திற்காக வர்த்தகருக்கு 14 ஆண்டுச் சிறை..!

*எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நஜீப்பிடம் எஸ்.பி.ஆர்.எம். விசாரணை..!

*சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியை துறக்கின்றாரா அஸ்மின் அலி?

*சன்வே’ மனித வளத்துறை குழும இயக்குனரானார் புவனேஸ்!

<<Tamil News Groups Websites>>